தமிழ்த்துறை 2010-2011ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. ஏம்.ஏ. தமிழ்ப் படிப்பும், எம்ஃபில் தமிழ், பிஎச்டி தமிழ்ப் படிப்பை 7 மாணவர்கள் 2011-2012இல் நிறைவு செய்திருக்கிறார்கள். தமிழ்த்துறையில் தற்போது நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்.
தமிழியல் கல்வியை நவீனத்திற்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, செயல்திறனும் பல்துறை ஆய்வூ
நோக்கும் கொண்டதாக அமைப்பதும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக
வழிகாட்டுவதும்.
மொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வூகளை ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு
வழங்குவதும் தேவையான மரபுகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும்.
தம்முள்ளும் இயற்கையூடனும் மக்கள் கொள்ளும் உறவை மேலும் சரியான புரிதலுக்கு உட்படுத்துவதும்
பக்குவப்பட்ட நாகரிகத்தை நோக்கிச் சமூகம் நகர்வதற்குத் தூண்டுவதும்.